பதிவு முறை
முதல் அழைப்பிலிருந்து பத்திரம் கையில் கிடைப்பது வரை
பத்திரப் பதிவு என்பது சிக்கலானது அல்ல. ஐந்து படிகள். ஒவ்வொரு படியிலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறோம். எதுவும் திடீரென்று வராது.
முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
பத்திரம் பதிவு செய்வதற்கு என்ன கொண்டு வர வேண்டும்?
இந்த நான்கும் இருந்தால் பதிவு தடையின்றி நடக்கும். ஏதேனும் ஒன்று இல்லாவிட்டால் அன்றைய தினம் பதிவு நடக்காது.
எழுதி வாங்குபவர்
ஆதார் அட்டை ஜெராக்ஸ்
சொத்தை வாங்குபவர் அல்லது பெறுபவர்.
எழுதி கொடுப்பவர்
ஆதார் அட்டை ஜெராக்ஸ்
சொத்தை விற்பவர் அல்லது எழுதிக் கொடுப்பவர்.
- ×2
சாட்சிகள் — இரண்டு பேர்
இருவரின் ஆதார் அட்டை ஜெராக்ஸ்
இருவரும் பதிவு நேரத்தில் நேரில் வர வேண்டும்.
பதிவின்போது அசல் ஆவணங்கள்
அசல் பத்திரம் + அசல் ஆதார் அட்டை
ஜெராக்ஸ் மட்டும் போதாது. பதிவு நாளன்று அசல் ஆவணங்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஐந்து படிகள்
பதிவு எப்படி நடக்கும்
ஒவ்வொரு படியிலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தனியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
- 1
பேசுங்கள்
தொலைபேசியில் அழைத்தோ, அலுவலகத்திற்கு நேரில் வந்தோ உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள். எந்த வகைப் பத்திரம் பொருத்தமானது, தோராயமாக எவ்வளவு செலவாகும் என்பதை அப்போதே சொல்லிவிடுவோம்.
நீங்கள்சொத்து பற்றிய விவரத்தைச் சொன்னால் போதும்.
- 2
ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்
பட்டா, பழைய பத்திரம், வில்லங்கச் சான்று ஆகியவற்றைப் பரிசோதிக்கிறோம். சொத்தின் மீது கடன் அல்லது தகராறு உள்ளதா என்பதைப் பார்த்து, குறை இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிடுவோம்.
நீங்கள்உங்களிடம் உள்ள பழைய ஆவணங்களைக் கொண்டு வாருங்கள்.
- 3
பத்திரம் தயார் செய்கிறோம்
சட்டப்படி சரியான வடிவில், தமிழிலோ ஆங்கிலத்திலோ பத்திரத்தை எழுதி அச்சிடுகிறோம். அதைப் படித்துப் பாருங்கள். புரியாத வரி இருந்தால் விளக்கிச் சொல்வோம். நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகுதான் அடுத்த படி.
நீங்கள்பெயர், சர்வே எண், அளவு சரியாக உள்ளதா எனப் படித்துப் பாருங்கள்.
- 4
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு தரப்பினரும் இரண்டு சாட்சிகளும் அலுவலகத்தில் இருக்க வேண்டும். கைரேகை, புகைப்படம், கையொப்பம் பதிவு செய்யப்படும். நாங்கள் உங்களுடன் வருகிறோம்.
நீங்கள்அசல் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
- 5
பதிவான பத்திரம் உங்கள் கையில்
பதிவு முடிந்ததும் ஆவணம் ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவு எண்ணுடன் திரும்பக் கிடைக்கும். அதன் பிறகு பட்டா மாறுதலுக்கும் நாங்கள் உதவுகிறோம்.
நீங்கள்பத்திரத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள்.
குடியாத்தம், தமிழ்நாடு
பீமராஜ் முதலி தெரு, புதுப்பேட்டை,
வேலூர் மாவட்டம், 632602
Lat 12.9467 Long 78.8734
06/08/2026 10:42 AM GMT +05:30
பதிவுக்கு முன் செய்ய வேண்டியது
GPS Map Camera செயலியில் சொத்துப் புகைப்படம் எடுக்க வேண்டும்
பத்திரப் பதிவுக்கு, சொத்தின் புகைப்படம் அதன் இருப்பிட விவரத்துடன் தேவைப்படுகிறது. Play Store-ல் உள்ள இலவச GPS Map Camera செயலியைப் பயன்படுத்தி எடுத்தால், புகைப்படத்திலேயே அட்சரேகை, தீர்க்கரேகை, முகவரி, தேதி மற்றும் நேரம் பதிந்து வரும்.
- 1
செயலியைப் பதிவிறக்கவும்
Play Store-ல் “GPS Map Camera” எனத் தேடி இலவசமாகப் பதிவிறக்கவும். கீழே உள்ள பொத்தானை அழுத்தினால் நேரடியாகச் செல்லும்.
- 2
இருப்பிட அனுமதி கொடுக்கவும்
செயலியைத் திறந்ததும் இருப்பிடத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். “அனுமதி” என்பதை அழுத்தவும். GPS-ஐ இயக்கி வைக்கவும்.
- 3
சொத்தின் அருகில் நின்று எடுக்கவும்
பதிவு செய்யப்படும் நிலம் அல்லது வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுக்கவும். முகவரியும் வரைபடமும் புகைப்படத்தில் தெரிவதை உறுதி செய்யவும்.
- 4
எங்களிடம் கொடுக்கவும்
எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பவும், அல்லது போனுடன் அலுவலகத்திற்கு வரவும். நாங்கள் அச்சிட்டுக் கொள்கிறோம்.
செயலியைப் பயன்படுத்தத் தெரியவில்லையா? அலுவலகத்திற்கு வாருங்கள் — உங்கள் மொபைலில் நாங்களே அமைத்துத் தருகிறோம்.
கட்டண விவரம்
முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம்
இந்தக் கட்டணங்கள் அரசுக்குச் செலுத்தப்படுபவை. சொத்தின் சந்தை மதிப்பு அல்லது அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு — இரண்டில் எது அதிகமோ, அதன் அடிப்படையில் கணக்கிடப்படும்.
எங்கள் எழுத்துக் கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை. அது தனியாக, பத்திரத்தின் வகையைப் பொறுத்து முன்கூட்டியே சொல்லப்படும்.
முழு கட்டணப் பட்டியலைப் பாருங்கள்
ஒவ்வொரு வகைப் பத்திரத்திற்கும் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் — அரசுத் தளத்தில் சரிபார்க்கப்பட்ட தேதியுடன்.
அரசு ஆதாரம்
நேரடியாக அரசுத் தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்
எங்களை நம்பியே இருக்க வேண்டாம். வில்லங்கச் சான்று, வழிகாட்டி மதிப்பு, கட்டண விவரம் அனைத்தும் பதிவுத்துறையின் தளத்தில் பொதுவாகக் கிடைக்கிறது.
உங்கள் சொத்துக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
சர்வே எண்ணையும் சொத்து அளவையும் சொன்னால், சரியான தொகையைக் கணக்கிட்டுச் சொல்கிறோம்.
